கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Wednesday, April 19, 2006

10.இவர்கள் சந்தித்தால்....

சமீபத்தில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு துணுக்கு
உங்கள் ரசனைக்கு...

கரைவேட்டியும் கறைஜீன்சும் சந்தித்தன எதிர்பாரமல்...

கரை: "வணக்கம்"
கறை: "மன்னிக்கவும். அரசியலும் அர்சியல்வாதியும் எமக்கு பிடிக்காது"
கரை: ஹா ஹா... தம்பி, இதுவும் அரசியல் தான்"
கறை: "விட்டுவிடுங்களேன் வேண்டாம்"
கரை: "காரணம் சொல் தம்பி"
கறை: அடுக்கிக்கொண்டே போகலாம்"
கரை: எங்கே ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்து"
கறை: "சொல்லில் சுத்தமில்லை. சொன்னதை சொன்னாற்போல் செய்வதில்லை"
கரை: "நீங்கள் உறுதியளிக்கும் தேதியில் பணியை முடித்ததுண்டோ?"
கறை: சரி..அடிக்கடி கூட்டணி மாற்றம், கட்சிமாற்றம்?""
கரை: "அடிக்கடி கம்பெனி மாற்றம்?"
கறை: "நாங்கள் மாறுவது தொழில் வளர்ச்சிக்கு (carrier growth)"
கரை: "நாங்கள் மாறுவதும் கட்சி வளர்ச்சிக்கும் கொள்கைக்கும்.."
கறை: "இல்லை பின்னால் இருப்பது பணமல்லவோ?"
கரை: "உங்களுக்கு எப்படி?"
கறை: "லஞ்சம், இதற்க்கென்ன பதில்?"
கரை: "வரியை குறைக்க எத்தனை தில்லுமுல்லு சொல்லு?"
கறை: "இப்படி பொதுவாக பேசக்கூடாது.."
கரை: "அதே...அதே...!"
கறை: "விடுங்கள்..சட்டமன்றத்தில் எப்போதும் வெட்டி பேச்சு"
கரை: "அட நீங்கள் மின்னஞ்சலில் பேசும் பேச்சு?"
கறை: "அதென்ன.... நினைத்தால் வெளிநாட்டு பயணம்?"
கரை: "அதென்ன கஷ்டமர் நினைக்காமல் அவரிடத்து திடீர் பயணம்?"
கறை: "பார்டீ பார்டீ( கட்சி).. இது தானா எப்போதும்?"
கரை: "பிறந்தா பார்டீ, போணா பார்டீ, வந்தா பார்டீ..இரவில் பார் (BAR), பகலில் டீ"
கறை: அய்யா ஆளை விடுங்கள்..என்ன வேணும் சொல்லுங்கள்"
கரை: "ஓட்டு போடு தம்பி. உங்க கையில தான் இருக்கு எங்க தலையெழுத்தும், இந்த நாட்டோட தலையெழுத்தும்..ஒரு சாதாரண கைநாட்டுக்கு இருக்கிற கடமை உணர்வு உனக்கில்லையேப்பா.
உங்க ஓட்டு வைக்குமே தப்பான அரசியலுக்கு வேட்டு..
கறை கண்டுபிடிப்பதென்றால் வெள்ளை துணியிலும் கண்டுபிக்கலாம்...
ஓட்டு போடு...... இல்லையெனில் ஓ போடு (49 ஓ)...

7 Comments:

At 3:39 PM, Anonymous Anonymous சொன்னது...

யாரையோ தா(தூ)க்கறாமாதிரி தெரியுது ஆனா யாருனு தான் தெரியல.:-))))

 
At 3:53 PM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது...

நல்ல கற்பனை உங்களுடய சொந்த கற்பனையா?

 
At 3:55 PM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது...

மன்னிக்கவும் மின்னஞ்சலில் வந்தது என்பதை கவனிக்கவில்லை

 
At 4:05 PM, Blogger கண்ணன் சொன்னது...

//Anonymous said...
யாரையோ தா(தூ)க்கறாமாதிரி தெரியுது ஆனா யாருனு தான் தெரியல.:-))))
//

அது யாருன்னு தெரியாதவரைக்கும் தான் நல்லது அனானி....

 
At 4:06 PM, Blogger கண்ணன் சொன்னது...

வாங்க குமரன்... வருகைக்கு நன்றி.

 
At 4:16 PM, Anonymous Anonymous சொன்னது...

நன்றி கண்ணன்..உங்கள் வலைப்பூவில் என் எழுத்தை கண்டு ஆனந்தம் அடைந்தேன்..
http://vizhiyan.wordpress.com
பார்க்கவும்.
-உமாநாத்

 
At 4:18 PM, Anonymous Anonymous சொன்னது...

நன்றி கண்ணன்..
http://vizhiyan.wordpress.com

 

Post a Comment

<< Home